- Get link
- X
- Other Apps
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, முக்கியமாக உங்கள் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கும் ஒரு எல்லை உண்டு. அது மீறப்படும் போது - டமால் டூமீல் தான். பேட்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒருவர் அது பாழாகிப்போன பின்னரோ வெடிப்பிற்கு உள்ளாகிய பின்னரே வருத்தப்படுவதிலும், ஸ்மார்ட்போன் நிறுவனம் மீது கோபம் கொள்வதிலும் அர்த்தமே இல்லை.
முதலில் உங்கள் கையில் இருப்பது ஒரு கருவி என்பதை உணருங்கள், நீங்கள் நினைக்கும்படி அது நடந்துகொள்ளும், ஆனால் எல்லா நேரங்களில் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதை புரிந்துகொள்வதற்கு ஸ்மார்ட்போன் பேட்டரி பாதுகாப்பு சார்ந்த மீறக்கூடாத 4 விதிகள் உள்ளன. அவைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவைகளென்ன.?
மீறக்கூடாத விதி #04
தொலைபேசி முழுமையாக (100%) சார்ஜ் ஆகிவிட்ட பின்னர் தொடர்ந்து சார்ஜர் பின் ஸ்மார்ட்போனோடு செருகப்பட்டிருப்பது செய்யக்கூடாத ஒரு விடயமாகும். சார்ஜ் செய்யப்படும் சாதனமானது ஏற்கனவே 100% சார்ஜ் ஆகிவிட்டதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உடனே அன்பிளக் செய்யவும். பேட்டரி வாழ்நாளை மிக வேகமாக கரைக்கும் காரியங்களில் மிகவும் மோசமானது இதுதான்.
மீறக்கூடாத விதி #03
ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்கள் தொலைபேசி 100% என்ற அளவு வரை சார்ஜ் ஆகியிருக்க வேண்டுமென்ற தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதுமே 100% பேட்டரி கொண்டிருக்க வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனை எப்போதுமே அதன் முழு கொள்ளளவில் வைத்திருப்பது பேட்டரியை மிகவும் சேதப்படுத்தும்.
மீறக்கூடாத விதி #02
உங்கள் தொலைபேசியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சார்ஜ் செய்ய மறக்காதீர்கள். முடிந்த வரை போதுமான அளவு சார்ஜ் செய்துவிட்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துங்கள் இல்லையெனில் சார்ஜ் தேவை என்ற நோட்டிபிக்கேஷன் வரும் முன்பே சார்ஜருடன் கனெக்ட் ஆகிவிடுங்கள். பேட்டரி தீரும் கடைசி நொடிவரைக்கும் காத்திருந்து மொபைல் பயன்பாடு நிகழ்த்துவது தவறு.
மீறக்கூடாத விதி #01
ஓவர்ஹீட்டிங் ஆவதை அதாவது கருவி மிகவும் சூடாகுவதை கட்டாயம் தவிர்க்கவும். பேட்டரிகள் மிகவும் வெப்ப உணர்திறன் கொண்டவைகளாகும். ஒருவேளை சார்ஜ் செய்த பிறகும் கூட, உங்கள் கேஜெட்கள் சூடாகினால் அதன் கேஸ்களை கழற்றிவிட்டு அதை சார்ஜ் செய்யுங்கள். மறுபுறம், நீங்கள் உங்கள் கருவியையோ சூரிய ஒளியின் கீழ் வைத்திருக்கவில்லை என்பது உறுதி செய்துகொள்ளுங்கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment