- Get link
- X
- Other Apps
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஆந்திர அரசினால் குரூப் 1 பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று அதற்கான அரசாணையை வழங்கியது குறித்து தனது டிவிட்டரில் "சிந்து கண்டிப்பாக இந்த நாட்டுக்கு மேலும் பல பெருமைகளைத் தேடித்தரப்போகும் காலம் வரும் என்று நான் நம்புகிறேன்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது 21 வயதாகும் சிந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கடந்த நான்கு வருடங்களாகத் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஒலிம்பிக்கில் தங்க வாய்ப்பைத் தவற விட்டிருந்தாலும் இந்திய பெண் வீராங்கனைகளில் முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றவர் என்கிற பெருமையைத் தட்டிச் சென்றார். கர்ணம் மல்லேஸ்வரி, சாய்னா நேவால், சாக்ஷி மாலிக், மேரி கோம் வரிசையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 5 வது இந்தியப்பெண் சிந்து.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு தெலுங்கானா அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும், ஹைதராபாத்தில் வீடும் வழங்கியது. அப்போது ஆந்திர அரசும் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கியது. மேலும் இந்தப்பதவியை அப்போதே ஆந்திர அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதை தற்போதுதான் சிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment