- Get link
- X
- Other Apps
அஞ்சலகங்களை யாரும் பயன்படுத்துவதில்லை என்று கூறப்படும் நிலையில், அவை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 81 துணை அஞ்சலகங்களும் 100 கிளை அஞ்சலகங்களும் திறக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்தமுள்ள 25 ஆயிரத்து 350 அஞ்சலகங்களில் இரண்டு இடங்களைத்தவிர மற்றஇடங்கள் கணினிமயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வப்போது அஞ்சல் சேவைக்கான கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதாகவும், புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி வருமானத்தை உயர்த்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment