- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் நடைபெற்ற 50 ஆண்டுக் கால ஊழல் பற்றி கமல் பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், கமல் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது ஊழல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார்.
அதில், கமல் பாஜகவின் தத்துவத்திற்கு எதிரானவர் என்றும் இந்து மத துரோகி என எச்.ராஜா கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டினார் சீமான்.
தமிழகத்தில் தன்னைவிட கமலுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் இருப்பதால் அவரது வார்த்தைகள் மக்களை அதிக அளவில் சென்றடைகிறது என்றும் ஊழல் பற்றிய அவரது கருத்துக்கு தனக்கும் உடன்பாடு என்றும் சீமான் கருத்து தெரிவித்தார்.
மேலும், ஊழல் பற்றி பேசும் நடிகர் கமல் தமிழகத்தில் உள்ள 50 வருடங்களாக இருந்த ஊழல் பற்றியும் பேச வேண்டும் என்றும் இப்போதுள்ள ஆட்சியாளர்களை மட்டும் குறை கூறக் கூடாது என்றும் சீமான் கேட்டுக் கொண்டார்.
'அரசியலுக்கு கமல் ஏற்கனவே வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அரசியலுக்கு வருவது என்றால் கட்சியைத் தொடங்கி கொடியைப் பிடிப்பது மட்டும் இல்லை. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல்தான். அரசியல் எண்ணம் இல்லாதவன் மனிதனே இல்லை என்கிறார் காந்தியடிகள் சொல்லி இருக்கிறார். திரைப்படத்தை விட ஆகச் சிறந்த அரசியல் வேறு ஒன்றுமே இல்லை' என்று சீமான் கூறினார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment