Sony Xperia R1 Plus Dual

இலங்கை அணிக்கு சிக்கல்

ஜிம்பாவே கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் 3-2 என்ற கணக்கில் சொந்த நாட்டில் இலங்கை அணியை தோற்கடித்து சாதனை செய்த ஜிம்பாவே தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் குவித்தது. இலங்கையும் முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் எடுத்தது. 10 ரன்கள் அதிகம் உள்ள நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே தற்போது 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்துள்ளது.

இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஜிம்பாவே அணி இந்த போட்டியை வெல்ல வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை அணி இந்த போட்டியை டிரா செய்துவிடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜிம்பாவே அணி நல்ல எழுச்சியை பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments