- Get link
- X
- Other Apps
'அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறுதான்' என, நடிகர் கமல், 'டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.'தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது' என, நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், 'டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம்' என, டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 'அனைத்து விதமான ஊழல்களை யும் கூறாதது தவறுதான்' என, நேற்று, கமல் தெரி வித்துள்ளார்.இது குறித்து, நடிகர் கமல், டுவிட்டரில், கூறியிருப்பதாவது: என் அறிவிப்பில் பிழை இருப்ப தாக கூறுகின்றனர்; உண்மை தான். எல்லா ஊழல்களைப் பற்றியும் கூறாத பிழை இருக்கிறது. கட்சி,நட்பு,குடும்ப பேதமின்றி அனைத்து ஊழல்களையும் தடுக்க முயல்வது என் கடமை; அது, அனைவரது கடமையும் கூட. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment