Sony Xperia R1 Plus Dual

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தேவையில்லை..!

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மூன்று நிமிடத்திற்கு மேல் நீங்கள் காத்திருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலை துறையிடம் கேட்ட ஆர்டிஐ கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த ஹரி ஓம் ஜிண்டால் ஆர்டிஐ சேவை மூலமாக தேசிய நெடுஞ்சாலை துறையிடம் கேட்ட கேள்விக்கு இந்தப் பதில் வந்துள்ளது.

3 நிமிடம்
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 3 நிமிடம் தான் காத்திருப்பு நேரம். ஒருவேலை 3 நிமிடத்திற்கும் அதிகமாகக் காத்திருப்பில் இருந்தால் இலவசமாகச் செல்ல முடியும். இந்தப் பதில் ஆர்டிஐ-க்கு இந்திய நெடுஞ்சாலை துறை அளித்த பதில் ஆகும்.

காத்திருப்பு நேரத்தின் வரம்பு
சுங்கச்சாவிடிகளில் 30 நொடிகளில் கட்டணங்களைச் செலுத்திவிட்டு வாகனங்கள் வெளியேற வேண்டும். அதே நேரம் நெரிசல் மிகுந்த நேரத்தில் அதிகபட்சமாக ஒரு வாகனம் 2 நிமிடங்கள் 50 நொடிகளில் டோல் கட்டணத்தைச் செலுத்திவிட்டு வெளியேற வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பு
ஆர்டிஐ கேள்வி மூலமாகப் பெற்ற பதிலை வைத்து ஜிண்டால் அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் நாடுமாறு கூறியுள்ளது. ஒரு வேலைக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்காட வேண்டும் என்றால் அதில் உள்ள சிரமங்கள் பல.

உச்ச நீதிமன்றத்தை நாட முடியுமா?
ரிட் மனு தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர முடியும். ஆனால் 200 கட்டணத்திற்கு 1 லட்சம் ரூபாய் வக்கில் கட்டணம் அளித்து வழக்கை வாதாடுவது சாமியனுக்குக்கடினம் ஆகும். அது மட்டும் இல்லாமல் கன்னியாகுமரியில் உள்ள ஒருவருக்குச் சென்னை அல்லது மதுரையில் வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதில் உள்ள சிரமத்தை பாருங்கள்.

இந்த வழக்கு எதில் வர வேண்டும்?
நாம் ஏற்கனவே வரி செலுத்தி வரும் நிலையில் டோலில் செலுத்தப்படுவது கட்டணமாகும், வரி இல்லை. எனவே அந்தக் கட்டணம் ஒரு சேவைக்காகச் செலுத்துவது. அப்படியானல் அது நுகர்வோர் நீதிமன்றத்தின் கீழ் நடத்த வேண்டும் என்றும் ஜிண்டால் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

விளக்கம்
அந்த வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நெடுஞ்சாலை துறை அளித்த பதிலை வைத்துப் பார்க்கும் போது 3 நிமிடத்திற்கு மேல் நீங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பில் இருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது உறுதி ஆகியுள்ளது.


Comments