Skip to main content
எல்லையில் துப்பாக்கிச்சூடு
காஷ்மீர் எல்லைப் பகுதியில், இந்தியா- பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாகிஸ்தான் ராணுவத்தினர் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை எல்லை மீறியுள்ளனர். அத்துமீறல் உறுதியான பின்னர், பாகிஸ்தான் ராணுவ வாகனத்தின்மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் நிலை தடுமாறிய பாகிஸ்தான் வாகனம், அருகிலுள்ள ஏரியில் வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நால்வர் ஏரியில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அத்துமீற முயன்ற பாகிஸ்தான் ராணுவ வாகனத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது' என்றனர். இந்தத் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம்குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறுகையில், 'பாகிஸ்தான் வீரர்கள், தங்கள் ராணுவ வாகனத்தில் எல்லைப் பகுதியில் ரோந்து சென்றபோது, இந்தியா அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது; இந்த அத்துமீறிய தாக்குதலால்தான் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். இதை முற்றிலுமாகக் கண்டிக்கிறோம்' என்றுள்ளனர்.
Comments
Post a Comment