Sony Xperia R1 Plus Dual

அமித் குமார் -உலக பாரா தடகளத்தில் அபாரம்


லண்டன்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் குமார், 'கிளப் த்ரோ' போட்டியில் வெ ள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8வது உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. மொத்தம் 92 நாடுகளில் இருந்து, 1074 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் ஈட்டி எறிதல் போட்டியில் (எப் 46 பிரிவு) இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார், தங்கம் வென்றிருந்தார். இன்று நடந்த 'கிளப் த்ரோ' (எப் 51 பிரிவு) போட்டியில் இந்தியாவின் அமித் குமார், 30.25 மீ., துாரம் எறிந்து, வெ ள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். செர்பியாவின் டிமிட்ரிஜெவிக், 31.99 மீ., துரம் எறிந்து, உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார். மற்றொரு செர்பிய வீரர் மிலோஸ மிடிக், 29.06 மீ., துரம் எறிந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

Comments