- Get link
- X
- Other Apps
சி.ஏ., தேர்வில், வேலூரை சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில், இரண்டாமிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். வேலூர் மாவட்டம், வேலூர், கொசப்பேட்டையை சேர்ந்தவர் ஆடிட்டர் சீனிவாசன். இவர் மகன் எஸ்.அகத்தீஸ்வரன், 21. இவர், சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில், இரண்டாமிடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண், 800க்கு, 602 ஆகும். இது, 75.25 சதவீதம். முதல் முயற்சியிலேயே இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவர் குறித்த மேலும் விபரம் தர, அவரது குடும்பத்தினர் மறுத்துடன், தங்களுக்கு பப்ளிசிட்டி எதுவும் வேண்டாம் என, கூறிவிட்டனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment