Sony Xperia R1 Plus Dual

கர்நாடகா சிறையில் சோதனை நடத்திய போலீசுக்கு அடி

கர்நாடகாவில் கலபுர்கி சிறையில் கண்காணிப்பு அதிகாரி  வசந்தசுல்லி தலைமையில் கைதிகளிடம் நேற்று சோதனை செய்யப்பட்டது. அதற்கு கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த ஒரு  கைதி, சோதனை நடத்திய போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்.  உடனே, கூடுதல் போலீசார் அழைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய கைதி ரவுடி மார்க்கெட் சதீஷை கைது  செய்தனர். தொடர்ந்து, நடந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து ரூ.1.20 லட்சம்  ரொக்கம், 6 கஞ்சா பொட்டலம், 5  செல்போன்கள், கத்தி, கத்தரிக்கோல், கார்ட் ரீடர், 10க்கும் மேற்பட்ட  சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

Comments