Sony Xperia R1 Plus Dual

குற்றாலத்தில் சாரல் விழா

குற்றாலம் சாரல் விழா இன்று துவங்குகிறது.திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம்வரையிலும் குளுகுளு சாரல் களைகட்டும். வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள்வந்துசெசல்வர். அவர்களை மகிழ்விப்பதற்காக சுற்றுலாத்துறையின் சார்பில் ஒரு வார காலசாரல் விழா நடத்தப்படுகிறது. 

இன்று மாலை குற்றாலம் கலைவாணர்அரங்கில் நடக்கிறது.கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கிவைக்கிறார். அமைச்சர்கள் சுற்றுலாத்துறை வெல்லமண்டி நடராஜன்.ஆதி திராவிடநலத்துறை ராஜலட்சுமி, செசய்தித்துறை கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறைமுதன்மை செயலர் அபூர்வ வர்மா மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பெண்கள், குழந்தைகளுக்கு பல்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Comments