- Get link
- X
- Other Apps
சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்துள்ளது. ஆனால் மழை வெகு நேரம் நீடிக்கவில்லை.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்தபடி இருந்தது. சென்னையில் இன்று மதியம் அனல் காற்று வீசியது. இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தென் சென்னை உட்பட பல பகுதிகளில் மழை கொட்டியது.
தாம்பரம், துரைப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஓ.எம்.ஆர், திருவான்மியூர், பாலவாக்கம், தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வேகமாக கொட்டியது. இருப்பினும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் மழை நின்றுவிட்டது.
இதனால் வெப்பம் குறைந்து ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சுவிட்டனர் சென்னைவாசிகள். அதேநேரம், சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு அதனால் தூக்கம் தொலைத்த சிட்டிசன்களையும் பார்க்க முடிந்தது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment