Sony Xperia R1 Plus Dual

உயில் எழுதும் முன் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்..!


பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன.

இத்தகைய உயிலில் பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வமான வார்த்தைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

உயில் (Will)
சட்டப்பூர்வமான ஆவணம் அவருடைய விருப்பப்படி சொத்தை ஒருவர் இறந்த பிறகு எப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதற்கான 
சட்டப்பூர்வமான ஆவணம்.

விருப்ப உறுதி எழுதப்படாத ஆவணம் (Intestate)
உயில் எழுதாமல் இறந்துவிடுதல் அல்லது மதிப்பில்லாத உயில் இத்தகைய வழக்குகளில் இறந்தவருடைய வழிக்காட்டுதல்களைவிட சட்டப்பூர்வமாக சொத்து வம்சாவழியினருக்கு கொடுக்கப்படுகிறது.

உயில் சாசனம் எழுதுபவர் (Testator)
பத்திரம் தயாரிக்கும் நபர்

பரம்பரைச் சொத்தை அடையும் உரிமைப் பெற்றவர் (egatee)
தனிப்பட்ட சொத்துக்கு வாரிசுரிமைப் பெற்ற நபர்

நிறைவேற்றுபவர் (Executor)
உயில் எழுதுபவர் தனது சொத்து தொடர்பான செயல்பாடுகள் தனது வழிகாட்டுதல்களின் படியே செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள அவரால் நியமிக்கப்படும் நபரே நிறைவேற்றுபவர் ஆவார்

உயில் இணைப்பு (Codicil)
ஏற்கனவே இருக்கும் உயிலில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது கூடுதல் இணைப்புகள் முறையாக சாட்சிதாரர்களுடன் செயல்படுத்தப்படுதல்

விருப்ப உறுதி சான்றிதழ் (Probate)
ஒரு உயிலின் மீது அதிகாரம் எடுத்துக் கொள்ள உரிமை வழங்குதல்

உயிலை பதிவு செய்தல் (Registration of will)
உயில் சாசனம் எழுதுபவரால் உயிலை பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தப் பதிவாளர் அல்லது துணை பதிவாளரிடம் சட்டப்பூர்வமான பகுதியில் உயில் பதிவு செய்யப்படும்போது கூர்ந்த ஆய்வுக்குப் பிறகு உயில் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டப் பிறகு உயில் சாசனம் எழுதுபவரிடம் உயிலின் ஒரு சான்றளிக்கப்பட்ட நகல் அளிக்கப்படுகிறது.

Comments