Sony Xperia R1 Plus Dual

அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி


டெர்பி:பெண்கள் உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்தை 186 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் ஏற்கனவே முன்னேறின. 16ம் தேதி, டெர்பியில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

வரும் ஜூலை 18ல் நடக்கும் உலக கோப்பை முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. ஜூலை 20ல் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Comments