- Get link
- X
- Other Apps
சென்னை நந்தனம் சிஐடியு காலனியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்தார்த் (2) என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் மாலை சித்தார்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது சமையல் அறையில் குடிநீர் கேனில் மண்ணெண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது. இதை குடிநீர் என நினைத்து சித்தார்த் எடுத்து குடித்துள்ளான். சிறிது நேரத்தில் குழந்தை எரிச்சல் தாங்க முடியாமல் துடித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய் உடனே சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தற்போது சித்தார்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment