- Get link
- X
- Other Apps
கன்னடம் தெரியாத வங்கி ஊழியர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் பதவி பறிபோகும் என்று கன்னட வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது.
கன்னட வளர்ச்சி ஆணையம் என்பது, கர்நாடக அரசால், சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்ட ஒரு அமைப்பாக செயல்படுவதாகும்.
இந்த ஆணையம், கர்நாடகாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் ஊரக, சிறுபான்மையினருக்கான வங்கியின் மண்டல தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
பணி நீக்கம்
அந்த கடிதத்தில், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்காத வங்கி ஊழியர்கள் 6 மாதத்துக்குள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், பணி நியமன விதிமுறைப்படி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி பிரிவு உள்ளது
நாடு முழுவதும் வங்கிகளில் ஹிந்தி பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறதை போல கர்நாடகாவில் அனைத்து வங்கிகளிலும் கன்னடப் பிரிவு துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு
ஒரு பக்கம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை தொடங்கியுள்ள கர்நாடகா, மறுபக்கம், தனது மொழியை காப்பாற்ற இதுபோன்ற செயல்களிலும் இறங்கியுள்ளது கன்னட ஆதரவாளர்களால் வரவேற்கப்படுகிறது.
கலக்கம்
அதேநேரம், கர்நாடகாவில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் உள்ளிட்ட பிற மாநில ஊழியர்கள், இந்த உத்தரவை சிரமமாக பார்க்கிறார்கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment