- Get link
- X
- Other Apps
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சிச்சுவான் மாகாணத்தில் குவாயுவானினில் இருந்து வடகிழக்கு 120 மைல்கள் தொலைவிலும் ஆறு மைல்களின் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் சாலையில் தஞ்சம் புகுந்தனர். சேதவிவரம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை. கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது சீனாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment