ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி?
- Get link
- X
- Other Apps
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள வைபை நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கண்டறிவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இண்டர்நெட் பயன்பாடு நாடு முழுக்க அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்ஜெட்களிலும் இண்டர்நெட் பேக்கள் கிடைக்கின்றன. இத்துடன் பொது இடங்களில் இலவச வைபை மற்றும் பெரும்பாலானோர் வீடுகளில் வைபை பயன்படுத்தப்படுகிறது.
பொது இடங்களில் வைபை பயன்படுத்துவோர் தொடர்ச்சியாக அங்கு செல்லும் போது, அடிக்கடி அங்கிருப்பவர்களின் வைபை பாஸ்வேர்டுகளை கேட்பதை தவிர்த்து பாஸ்வேர்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டுகளை கேட்பதை தவிர்க்க முடிவதோடு எளிதாக போனில் வைபை இணைப்பைப் பெற முடியும்.
இதனால் வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்பவர்கள் குறிப்பிட்ட நெட்வொர்க் பாஸ்வேர்டுகளை பார்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். இதற்கான வழிமுறையை தொடரும் முன் உங்களது ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வைபை பாஸ்வேர்டு வியூவர் (WiFi Password Viewer -ROOT) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
* செயலியை இன்ஸ்டால் செய்ததும், செயலி கோரும் அனைத்து பெர்மிஷன்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பதிவு செய்யப்பட்டுள்ள வைபை பாஸ்வேர்டுகளை பார்க்க முடியும்.
* வைபை பாஸ்வேர்டு வியூவர் கேட்கும் பெர்மிஷன்களை அனுமதித்ததும் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பாஸ்வேர்டுகளை செயலி காண்பிக்கும்.
* ஒருவேளை பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் செயலியில் உள்ள பாஸ்வேர்டினை அழுத்தி பிடித்து, பாஸ்வேர்டினை கிளிப் போர்டில் காப்பி செய்து குறுந்தகவல் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
குறிப்பு: ரூட் செய்யப்படாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியாது. இத்துடன், ஸ்மார்ட்போன்கள் ரூட் செய்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தில் தொடர வேண்டும். ஸ்மார்ட்போன்கள் ரூட் செய்யப்பட்டால் அவற்றிற்கு வழங்கப்பட்ட வாரண்டி செல்லாமல் போகும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment