- Get link
- X
- Other Apps
குறைந்த சுவைக்கும் திறன் கொண்டவர்கள் மிக இனிப்பாக அதிக சுவையுடையதாக கலோரிகள் அதிகமுடையதை உண்ணுகிறார்கள், இதனால் அவர்கள் ஆரோக்கியமற்ற உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
நியூயார்க், இதாகா கார்னெல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான, ராபின் டாண்டோ அவர்கள், 'எங்கள் ஆய்வில் இனிப்புச்சுவைக்கும் திறன் குறைந்தவர்கள் உணவில் அதிகளவு சர்க்கரை சேத்துக்கோல விரும்புகிறார்கள் என்று கண்டுபுடிக்கப்பட்டுள்ளது' என்று கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சி முடிவு அபிடைட் என்ற இணைய புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. டாண்டோ குழுவினர், இந்த ஆய்விற்கு உட்படுத்தியவர்களின் சுவைமொட்டுகளை தற்காலிகமாக செயல்த்திறன் குறைய செய்து அவர்களுக்கு வேவ்வேறு சர்க்கரை அளவுடைய மாதிரி உணவுகள் கொடுத்துள்ளார்கள்.
ஆய்வாளர்கள் தங்கள் மேலோட்டமான சோதனைக்காக, பங்கேற்பாளர்களின் குறைந்த, நடுத்தர, அதிகமான அளவிலான தற்காலிக இனிப்புச்சுவைத்திறனை பாதிக்கும் ஜிம்னெமா சிலெஸ்டர் கொடுத்து அதற்கேற்ற அளவிலான மூலிகை கலந்த மூலிகை தேநீரையும் கொடுத்தார்கள்
இந்த சோதனையின் பொது பங்கேற்றவர்களின் சுவையற்ற தன்மைக்கு ஏற்றவாறு இனிப்பின் அளவை அவர்கள் விரும்பிய அளவு அதிகரித்தனர்.
இதன்மூலம் சுவை மொட்டுகள் செயல்திறன் குறைந்த பங்கேற்பாளர்கள் மிக அதிகமான அளவு சர்க்கரையை சேத்து உண்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.
'அதிக எடை உடையவர்களின் சுவைக்கும் திறன் குறையும் என்று பரிந்துரைக்கிறார்கள். அதனால் அதிக எடை உள்ள அல்லது உடல் பருமனான ஒருவருக்கு சுவையுணர்வு திறன் குறைகிறது, அவர்கள் அதிக சுவைக்காக கடுமையாக தூண்டப்படுவதால் இந்நிலை தொடருகிறது என்று எங்கள் ஆய்வு கூறுகிறது'. என்கிறார் டாண்டோ.
இது அவர்களின் குறைந்த சுவையுள்ள உணவுப்பழக்கத்தை மாற்றி அதிக சுவையுள்ள உணவை உட்கொள்ளச்செய்கிறது என்று அவர் கூறுகிறார்.
'நமது சுவைப்புலன் அமைப்பு எனும் சுவைக்கும் திறன் உள்ளமைப்பானது உடல் எடை கூடுவதற்கும் ஒரு முக்கிய இணைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு சுவைத்திறன் செயலிழப்பும் உடல் எடைக்கு ஒரு முக்கிய காரணி எனலாம்' என்கிறார் டாண்டோ.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment