- Get link
- X
- Other Apps
ஆரவ்வுக்கு ஜூலிதான் சரியான ஜோடி! நீ அவனை மறந்துடு: ஒரு தாயின் அறிவுரை
பல ஆண்டுகளாக சீரியல்களுக்கு அடிமையாக இருந்த பெண்கள் முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக ஓவியா குறித்து பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு பெண் ஓவியா குறித்து கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் கூறுவது இதுதான்: ஓவியாவை அந்த ஆரவ் அநியாயமாக நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாரே. ஓவியாவுக்கு எத்தனை பேர் கட் அவுட் வைக்கின்றார்கள், அவருக்கு எத்தனை பேர் ஓட்டு போட்டு வருகின்றார்கள். ஆனால் இந்த ஆரவ் இப்படி செய்யலாமா,
ஓவியா, உனக்கு அந்த ஆரவ் சரியான ஜோடி இல்லை, அவருக்கு ஜூலிதான் பொருத்தமாக இருக்கும். நீ அவனை மறந்துடு, உனக்கு இந்த உண்மையை புரிய வைத்த வையாபுரிக்கும் சினேகனுக்கும் எனது நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment