Sony Xperia R1 Plus Dual

ஸ்ட்ராபெர்ரியில் நிறைந்திருக்கும் அழகு ரகசியங்கள்!


ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவிடும். நான்கு ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம் வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சருமம் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் சரும சுருக்கங்களை தவிர்த்திடும்.

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்ற்ம் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும். ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.

ஆக்னீ தோன்ற காரணம் நம் சருமங்களில் சுரக்கும் சீபம் தான். இவற்றை தடுக்க 5 ஸ்ட்ராபெர்ரிக்களை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களில் கழுவிவிடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்

கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் சி பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.

சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரிகூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.

ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான பயோட்டின் இருக்கிறது. இந்த பயோட்டின் நகம் வளர்ச்சிக்கு மற்றும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான நகத்திற்கு கியாரண்ட்டி!

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சாலிசைக்ளிக் ஆசிட் சிறந்த பேஷியல் க்ளன்சராக பயன்படும். சாலிசைக்ளிக் ஆசிட் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சருமத்துளைகளை இறுக்கமாக்கிடும்.

ஸ்ட்ராபெர்ரியை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி லேசகா மசாஜ் செய்திடுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பீரசிரில் வைத்திடுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதனை முகத்தில் தேய்த்து வர ஸ்ட்ராபெர்ரி சிறந்த டோனராக செயல்படும்.

ஸ்டாபெர்ரியை அரைத்து அந்த கலவையுடன் பொடித்த ஓட்ஸ் மற்றும் க்ளிசரின் கலந்து பாதம் முழுவதும் மசாஜ் செய்திடுங்கள். பின்னர் சூடான நீரில் 10 காலை வைத்தால் பாதங்களில் உள்ள டெட் செல்கள் நீங்கிடும்.

Comments