- Get link
- X
- Other Apps
இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற செய்தி உண்மை இல்லை என்றும், இறப்பை பதிவு செய்யவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதேபோல, பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும். வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நேற்று ஊடங்களில் செய்திகள் வெளியாகின
ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும், இது வெறும் வதந்தியே, இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment