Sony Xperia R1 Plus Dual

ஜூலி ரொம்ப ஃபீல் பண்ணினா.. - சகோதரர் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, தன்னுடைய வீடியோக்களை பார்த்து மிகவும் மனம் வருத்தப்பட்டதாக அவரின் சகோதரர் ஜோஷ்வா கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஜூலி. ஆனால், அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல.. அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கும் பிடிக்காமல் போனது. சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராகவே மீம்ஸ்கள் மற்றும் கருத்துகள் உலா வந்தது. 

அந்நிலையில், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி. அதன் பின் அவர் நடிகர் பரணியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக சில புகைப்படங்களும், வீடியோவும் வெளியானது. மேலும், மக்களிடையே அவர் மீது அதிருப்தி இருப்பதால் முகத்தை காட்ட முடியாமல் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் ஜூலியின் தற்போதைய மனநிலை பற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அவரின் சகோதரர் ஜோஷ்வா " ஜூலி வீட்டிற்கு வந்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதையும் ஹாட் ஸ்டாரில் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் ஜூலியின் மீது கோபம் இருந்தது. நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். இரண்டு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு அவரின் வேலையை அவர் தொடர்வார். ஆனால், சினிமாவில் நடிக்க மாட்டாள். அதை அப்பா, அம்மா ஏற்க மாட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.

Comments